பலன் தரும் பதிகப் பெருவழி – 6

10557347_1590775037878683_4674052488221146523_n.jpg

தமிழ் நெறி வேள்விச் செம்மல் சிவனகம் ந. அருளரசு, M. Com

தெய்வப்புலவர் திருவள்ளுவனார் இனியவை கூறல் என்னும் பத்தாவது அதிகாரத்தில் அருளிச் செய்த ஏழாவது திருக்குறள்

“நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்” (97)

இதற்கு உரை செய்த “பரிமேலழகர்” ஒருவனுக்கு இம்மைக்கு நிதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும் பொருளால் நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல் என்றார்.
அவ்வாறான சொல்லால் அமைந்ததுதான் நம்முடைய நால்வர் பெருமக்கள் அருளிச் செய்த “தேவாரமும் திருவாசகமும்”. அவைகள் பதிகப் பெருவழியில் நடை பயின்று நம்மைச் செந்தமிழ்ச் சிவநெறிக்கும், சித்தாந்தச் செந்நெறிக்கும் செலுத்த வல்ல ஆற்றல் படைத்துள்ளன.

பதிகப் பெருவழிக்கு வித்திட்ட பெண் பாலார் ஆகிய புனிதவதியார் என்னும் “காரைக்கால் அம்மையாரையே” சாரும் என்ற உண்மையை சென்ற பதிவுகளில் கண்டு இன்புற்றோம்.

அந்தப் பதிகப் பெருவழியில் ஞானப்பால் உண்ட மூன்று வயதில் நடை பயிலத் தொடங்கி, பதினாறாவது வயதில் ஞான மெய்ஞ்நெறிதான் யார்க்கும் “நமச்சிவாய”ச் சொல்லாம் என்று நாதன் எழில் வளர் சோதியில்யாவரும் புகுக என்று சொல்லிய பின்னர் அதனை வலம் வந்து தானும் தன் தையலுமாய் புக்கு ஒன்றி உடன் ஆனவரை, பண்ணிறைந்த அருமறைகளைப் பகர்ந்தவர் “திருஞானசம்பந்தர்”.அவரின் பதிகப் பெருவழியினை”எழுது மாமறையாம் பதிகத்து இசை ” என போற்றிப் புகழ்ந்துள்ளார்.

எழுது மாமறை யாம்பதி கத்திசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்
தொழுது போந்துவந் தெய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்திரு வெண்ணிப் பதியினில்.    [ பெ.பு. – 2256 ]

தமிழ் வேதத்தின் ஓங்கு இசை என வழங்கப் பெறும் “திருஞானசம்பந்தப் பெருமானின்” திருக்கடைக்காப்பு, 16,000 பாடல்களைக் கொண்டது என்கிறது “திருமுறை கண்ட புராணம்”. அதில் தற்போது நமக்கு கிடைத்துள்ளது 385 பதிகங்களில் அமைந்துள்ள 4162 பாடல்களேயாம். 

[வளரும்]

பலன் தரும் பதிகப் பெருவழி – 5

image10951

தமிழ் நெறி வேள்விச் செம்மல் சிவனகம் ந. அருளரசு, M. Com

திருஆலங்காட்டு மூத்தத் திருப்பதிகம் – 2

இப் பதிகத்தில் ஆலங்காட்டுப் பெருமானின் ஆடல் சிறப்பை பத்து வகையாக விவரித்து பதிகப் பலனாக பாவம் நாசம் ஆகும் எனத் தெரிவிக்கின்றார்.அவை பின்வருமாறு:

1. பேய் முழவு கொட்ட கூளி பாட பரந்த காட்டில் குழகன் ஆடுகின்றான்.
2. கனங்கள் சூழ பிணங்கள் மாந்தி களித்த மனத்தவர் அணங்கு காட்டில் அழகன் ஆடுகின்றான்.
3. ஊமன் வெருட்ட ஓரி கதித்து எங்கும் இறைவன் நட்டம் பேணுகின்றான்.
4. பேய்கள் இரிந்து ஓட பித்தவடிவு கொண்டு பெருமான் ஆடுகின்றான்.
5. புலித்தோல் பியற்கு இடுப் பள்ளி இடம் அதுவே ஆகப் பரமன் ஆடுகின்றான்.
6. கூளிக் கனங்கள் குழலோடு இயம்ப குழகன் ஆடுகின்றான்.
7. முழவின் ஓசை முறைமை வழாமை அந்தி நிறுத்தம், அனல் கை ஏந்தி, அழகன் ஆடுகின்றான்.
8. பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டில் மலை மகள் மருள மாயன் ஆடுகின்றான்.
9. படு வெண் துடீயும் பிறையும் கறந்த பரமன் ஆடுகின்றான்.
10. மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுகின்றான்.

இவ்வாறு அமைந்த மூத்தத் திருப்பதிகங்களில் முதற் பதிகம் திருஞான சம்பந்தர் பெருமான் முதன் முதலாகப் பாடி அருளிய “நட்டபாடை”பண்ணி ல் அமைந்துள்ளது. அடுத்த மூத்தத் திருப்பதிகங்களில் இரண்டாம் பதிகம் சுந்தரமூர்த்திப் பெருமான் முதன் முறையாகப் பாடிய ”இந்தளப் பண்ணில்” அமைந்து உள்ளது.

தேவார அடங்கன் முறையான ஏழு திருமுறைகளை அருளிச் செய்த அருளிச் செய்த மூவர் பெருமக்களும் மேற்சொன்ன பதிகப் பெருவழியில் நடை பயின்று இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம், இடர் கெடலுமாம் அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லை என அறுதி இட்டு உறுதி கூறுகின்றன. அவற்றைத் தொடர்ந்து அனுபவிக்க குருவருளும் திருவருளும் துணை நிற்பதாகுக.

“பதிகப் பெருவழி காட்டிப் பருப்பதக் கோன்பயந்த
மதியத்திருநுதல் பங்கன் அருல்பெற வைத்த எங்கள்
நிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடைய
கதியைக் கருத வல் லோர்அம ராவதி காப்பவரே”.         (11-34-2 )

பதிகப் பெருவழி காட்டி பருப்பதக் கோன் பயந்த மதிபதத் திருநுதல் பங்கன் அருள் பெற வைத்த எங்கள் நிதியினை பிரமாபுர நகர் மன்னனை என்னுடைய கதியை கருத வல்லோர் அமராவதி காவலரே!

[வளரும் ]

பலன் தரும் பதிகப் பெருவழி – 4

252816_162161693849680_7405294_n

தமிழ் நெறி வேள்விச் செம்மல் சிவனகம் ந. அருளரசு, M. Com

ஆலங்காட்டில் ஆடு மா நடனம் கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்பொழுதும் நம்மைப் பாடுவாய் என் சிவபெருமான் இவரைப் பணித்த ஞான்று, ஓதியருளிய திருப்பதிகங்கள் இரண்டு, இவற்றை மூத்தத் திருப்பதிகங்கள் எனத் தலைப்பிட்டு நம்பியாண்டார் நம்பிகள் பதினோராம் திருமுறையில் தொகுத்து அமைத்து உள்ளார்.

திருஆலங்காட்டு மூத்தத் திருப்பதிகம் – 1

இப் பதிகத்தில் ஆலங்காட்டுப் பெருமான் நடம் ஆடும் இடம் எவ்வாறு அமைந்துள்ளது என்ற செய்தியை பத்து வகையாகச் சுட்டிக் காட்டி பதிகத்தின் பலனாக செப்பிய செந்தமிழ் பத்தும், வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவர் எனக் குறித்துள்ளார். அவை பின்வறுமாறு:

1. மார்பகங்கள் வற்றி நரம்புகள் மேல் எழுந்து கண்கள் குழி விழுந்து, தலை மயிர் சிவப்பாகி பற்கள் நீண்டு பெண் பேய்கள் தங்கி அலறி உலரும் காடு.
2. கள்ளி மரக் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி கொள்ளிக் கட்டையை வாங்கி, மைய விள்ள எழுதும் சுடலை.
3. வாகை மரத்தின் முற்றிய நாற்றுகள் சாற்றிய ஒலி செய்ய அறிவை மயக்கும் இருளில் கூகையோடு ஆண்டலை பாட ஆந்தை கோட உள்ள இடம் சுடுகாடு.
4. வேள்விக் குழியில் உள்ள சோற்றை குறு நரி தின்ன, அதைக் கண்ட பேய்கள் கையடித்து ஓடும் காடு.
5. ஊனை விழுங்கி தலைமாலை பரவ, குழந்தைக்கு காளி எனப் பெயரிட்டு தூசு அகற்றி, பால் கொடுத்து அழுது உறங்கும் பேய்க் காடு.
6. நீண்ட நகத்தையும் மாறுபட்ட கால்களையும் உடைய பருந்து, கூகை, சீவல், ஆந்தைகள் அலற குறுநரிகள் சென்று வெறியாடி, பிணத்தைப் புரட்டும் புறங்காடு.
7. கொள்ளிவாய்ப் பேய்கள், துணங்கை என்னும் கூத்தை ஆடி பிணத்தின் ஊனைத் தின்று ஆடும் காடு.
8. நாடும், நகரமும் திரிந்து நன்னெறி நாடி நயந்தவரை முதுபிணித்திட்ட உடன் முன்னிய பேய்க்கனம் சூழ் காடும், கடலும், மலையும், மண்ணும், விண்ணும் சுழலும் இடம்.
9. .தத்தம்-கைக்கிளை-விளரி-தாரம்-உழை-இளி ஓசை என்னும் ஏழ் வகைப் பண்களுக்கு சச்சரி-கொக்கரை-தக்கை-தகுணி-துந்துபி-தாளம்-வீணை-மத்தளம்-கரடிகை-தமருகம்-குடமுழா-மொந்தை என்னும் பன்னிரு இசைக் கருவிகள் இயங்கும் இடம்.
10. புந்தி கலங்கி, மதி மயங்கி, இறந்தவரை சந்தி வைத்து கடமை செய்து, தக்கவர் இட்ட செந்தீ விளக்காக திகழும் புறங் காடு.

[ வளரும்]

பலன் தரும் பதிகப் பெருவழி – 3

 

251946_502886256405263_86098358_n

தமிழ் நெறி வேல்விச் செம்மல் சிவனகம் ந. அருளரசு, M. Com

பதிகப் பெருவழிக்கு வித்திட்ட பெருமை பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் இருபத்தெழுவரில் (27) பெண்பாலராய்த் திகழ்கின்ற புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் அவர்களையேச் சாரும்.

“ இவர் நம்மைப் பேணும் அம்மை காண் ” எனக் கயிலை எம்பெருமானாலும், “மானிடம் இவர்தான் அல்லர், நற்பெருந் தெய்வம்”  என கணவர் பரமதத்தனாலும் போற்றப்பட்டவர்.

இவ்வம்மையார் எம்பெருமானிடம் வேண்டி நின்றது :

இறாவா இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.                        (12 – காரைக்கல் அம்மை – 60)

(1) இறவாத இன்ப அன்பு – மாணிக்கவாசகரின் அறிவு (ஞான நெறி)
(2) பிறவாமை – சுந்தரரின் செறிவு ( யோக நெறி)
(3) மறவாமை அப்பரின் சீலம் ( சரியை நெறி)
(4) மகிழ்ந்து பாடுதல் – சம்பந்தரின் நோன்பு( கிரியை நெறி)

எனவே நால்வர் நெறியினை முன்கூட்டியே நமக்கு அறிமுகப் படுத்திய சிறப்பும் இவருக்கு உண்டு.

[வளரும்]

பலன் தரும் பதிகப் பெருவழி – 2 ( அறிமுகம் )

599295_452582961431866_1542811339_n

தமிழ் நெறி வேல்விச் செம்மல் சிவனகம் ந. அருளரசு, M. Com

தொடர்ந்து செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டமெனும் (ஞான சம்பந்தர் செந்தமிழால் நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூட வேண்டி, கொடிமாடசெய்குன்றூரில் அருளப் பெற்ற திருநீலகண்டப் பதிகமும் (1-116), கொள்கையினால் உயர்ந்த நிறைவுடையார் இடர் களையும் திருநெடுங்களப் பதிகம் (1-52) மங்கலம் தரும் தில்லைப் திருப்பதிகங்களான கற்றாங்கு எரியோம்பி (1-80) அன்னம் பாலிக்கும் (5-1) மடித்தாடும் அடிமைக் கண் (7-90) எனும் மூவர் தமிழும் ஓதி புலியூர் சிற்றமபலத்து எம்பெருமானை பெற்று மகிழ முயற்சி மேற் கொள்ளப்பட்டது.

வருவாய் பெருக வாசிதீரவே காசு நல்குவீர் (1-92) என வீழிமிழலை மேல் தாழும் மொழிகளை விண்ணப்பித்து, தாண்டக வேந்தரின் நின்ற திருத்தாண்டகம் (6-94) திருவடித் தாண்டகம் (6-6) மற்றும் கயிலை மலையானின் போற்றித் திருத்தாண்டகங்கள்(6-55, 56 57) வாயிலாக வேள்வி வழிபாடுகள் தொடர்ந்தன.

தீவினைகள் தீர்க்கும் திருமாகறல் திருப்பதிகமான “விங்குவிளை கழ்னி மிகு கடையர்கள்” பாடலால் (3-72) அரனடி கூடும் சம்பந்தன் உரையால் தொல்வினைகள் தொலைய வேண்டி, வேண்டுகோள் விடுத்தப் பின்னர் பரசுவது எம்பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது எனப் புகலி வேந்தர் அருளிய “கோளறு பதிகம்” – வேயுறு தோளி பங்கன் (2-85) ஓதி, அண்ணல் திருநீறு செம்மை திடமே என்பதனால் நாளும் கோளும் அடியாரை வந்து நலியாது என ஆணை வழங்கப்பட்டது.

இவ்வாறாக பதினாறு கால வேள்வி இருபத்து நான்கு (24) மணி நேரமும் சிவனருளால் பதிகப் பெருவழியில் நடை பெற்றதற்கான காரணத்தை வினவுகையில் “இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம், அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே” (7-34) என வன் தொண்டன் ஊரன் பாடிய வழி விளக்கம் தரப்பட்டது.

எனவே பதிகப் பெருவழியில் சித்தாந்த சைவத்திற்கு மறுமலர்ச்சியை வழங்கிய நால்வர் நெறியான தேவார, திருவாசகத் திருப்பதிகங்கள் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தர வல்லது என்பதனை உணர்த்தும் முகத்தான் இக்கட்டுரைத் தொடர் அன்பர்கட்கு அறிமுகப் படுத்தப்படுகின்றது. அன்பர்கள், அடியார் பெருமக்கள், நண்பர்கள் நால்வர் நெறியில், தம் பயணத்தை தொய்வின்றி தொடர, குருவருளும் திருவருளும் துணை புரிவதாகுக.

மாதோர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞான சம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை
ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக் கேட்டு உகந்தவர் உகந்தவர் தம்மை
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே. (2-106-11)

இம்மை மறுமை எனும் இருமை வாழ்க்கைக்கும்
செம்மை நெறிகாட்டும் சிந்தை நெறி – வெம்மைநிலை
மாற்றும் உயர் மந்திரமாம் மன்னு திருமுறைகள்
போற்றவரும் பொற்புகள் எல்லாம். – ஒளியகம்.ந.ரா.ஆடலரசு.

[ வளரும்

பலன் தரும் பதிகப் பெருவழி- 1 ( அறிமுகம் )

74983_361274597313240_1083297628_n

தமிழ் நெறி வேள்விச் செம்மல் சிவனகம் ந. அருளரசு, M. Com

கடந்த 13-03-2010 அன்று வேலூரை அடுத்த பள்ளி கொண்டானுக்கு அருகில் அமைந்துள்ள வெட்டு வாணம் கிராமத்தில் நூற்று முப்பது (130) ஆண்டுகளுக்கு முன்னால் ஆன்றோர்களால் அமைக்கப்பட்டு, தமிழ்த் தென்றல் திரு.வி.க. போன்ற சான்றோர்கள் போந்து சிறப்பித்த  “அறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை”யில் இருபத்து நான்கு மணி நேர “மகா சிவ வேள்வி” நடைபெற்றது.

தெய்வச் சேக்கிழார் திருவாக்கில் அமைந்த அஞ்செழுத்து ஓதி அங்கி வேட்டுநல் வேள்வி எல்லாம் நஞ்சணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து எஞ்சலில் அடியார்க் கென்றும் இடையறா அன்பால் வள்ளல் தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள்நிழல் தங்கி னாரே (12-சிறப்புலி-5)என்பதற்கு ஏற்ப காழியர் மன்னன் உன்னிய அஞ்செழுத்துப் பதிகமான  “துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்” (3-22) என்ற பதிகத்தை முழுமையாக ஓதி, பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் வாக்கான

 “அஞ்செழுத்தால் உள்ளம் அரணுடைமைகண்டு அரனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் – அஞ்செழுத்தால்
குண்டலினியில் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு”.   (சிவஞானபோதம் வெண்பா (9-3-1) ) என்ற நிலையில் முதல் கால வேள்வி சிறந்தது.

அடுத்து நலம் தரும் நமச்சிவாய பதிகங்களான “நாதன் நாமம் நமச்சிவாயவே ” (3-49) எனும் தமிழ் ஞானசம்பந்தன் சொல்லில் மகிழ்ந்து, “ நற்றுணையாவது நமச்சிவாயவே” (4-11) என்னும் அப்பர் வாக்கில் தவழ்ந்து, “ நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” (7-48) என்னும் நாவலூரன் உரையில் திளைத்து,

“ மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
பேயேன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்சக னேயோ
சேய நாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே! (8-23-7) எனும் மணி மொழியாரின் திருவருள் தேனில் தோய்ந்து எழ இரண்டாம் கால வேள்வி நிறைந்தது.

[வளரும் ]

 

பலந்தரும் பதிகப் பெருவழி

10885599_1030047793689104_5240526890861092184_n

இனி வரும் நாட்களில் என்னுடைய திருமுறை அருட்குருநாதார் தமிழ் நெறி வேள்விச் செம்மல் சிவனகம். ந.அருளரசு ஐயா அவர்களின் ஆணையின் படி அவர் கூற்றாக ஒரு தொடர் தொடர்ந்து தினமும் வெளியிட திருவருளும் குருவருளும் துணை புரிகின்றது.”பலன் தரும் பதிகப் பெருவழி” என்ற தலைப்பில் சித்தாந்த சைவத்திற்கு மறுமலர்ச்சியை வழங்கிய நால்வர் நெறியான தேவார திருவாசகத் திருப்பதிகங்கள் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தர வல்லது என்பதனை உணர்த்துமுகத்தான் இக்கட்டுரைத் தொடரை அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்கின்றேன்.

[வளரும் ]

திருஞான சம்பந்தர் சுவாமிகள் – திருக்கடைக்காப்பு- முதல் திருமுறை

திருஞான சம்பந்த சுவாமிகள் – திருக்கடைக்காப்பு -(08)

திருநல்லூர்ப் பெருமணம்

இறைவன் : சிவலோகத்தியாகர்
இறைவி : உமையம்மை

திருமுறை : 3 / 125 – வது பதிகம்
இராகம் : சாம இராகம்
பண் : அந்தாளிக் குறிஞ்சி


[01] கல் ஊர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல் ஊற்ப் பெருமணம்பாட்டு மெய் ஆய்ந்தில
சொல் ஊர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே.

[02] தரு மணல் ஓதம் சேர் தண்கடல் நித்திலம்
பரு மணலாகக் கொண்டு பாவை நல்லார்கள்
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர்ப்
பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே.

[03] அன்புறு சிந்தையராகி அடியவர்
நன்புஉறு நல்லூர்ப் பெருமணம் மேவி நின்று
இன்புறும் எந்தை இணைஅடி ஏத்துவார்
துன்புஉறுவார் அல்லர் தொண்டு செய்வாரே.

[04] வல்லியந்தோல் உடை ஆர்ப்பது போர்ப்பது
கொல் இயல் வேழத்து உரிவிரி கோவணம்
நல் இயலார் தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே.

[05] ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண்
நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன்கொன்றை
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப் பெருமணம்
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே.

[06] சிட்டப்பட்டார்க்கு எளியான் செங்கண் வேட்டுவப்
பட்டம் கட்டும் சென்னியான் பதியாவது
நட்டக்கொட்டு ஆட்டுஅறா நல்லூர்ப் பெருமணைத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானிரே.

[07] மேகத்தக் கண்டன் எந்தோளன் வெண்நீற்று உமை
பாகத்தன் பாய் புலித்தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தையே புரிந்தானே.

[08] தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை
உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்கு இருந்தீர் எமைப்போக்கு அருளீரே.

[09] ஏலும் தந்தாமரையானும் இயல்பு உடை
மாலும் தம் மாண்பு அறிகின்றிலார் மாமறை
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம்
போலும் தம் கோயில் புரிசடையார்க்கே.

[10] ஆதர் அமணொடு சாகியர் தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குஉறுவீர் வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே.

[11] நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத்தானை
உறும் பொருளால் சொன்ன ஒந்தமிழ் வல்லார்க்கு
அறும் பழி பாவம் அவலம் இலரே.

திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருக்கடைக்காப்பு – (7) திருநல்லூர்ப் பெருமணம்

திருமுறை : 3/46
இராகம் : பைரவி
பண் : கௌசிகம்

இறைவன் : சிவலோகத்தியார்
இறைவி : உமையம்மை

(01) காதல் ஆகிக் கசிந்துகண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

(02) நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

(03) நெக்கு உள்ஆர்வம் மிகப்பெருகிந் நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சியாவே.

(04) இமயன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே.

(05) கொல்வாரேனும் குணம்பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீகுவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.

(06) மந்தரம்மன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.

(07) நரக்ம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயே.

(08) இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தல்ம்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலம்கொள் நாமம் நமச்சிவாயவே.

(09) போதன் போதுஅன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

(10) கஞ்சி மண்டையர் கையில்உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சு உண் கண்டன் நமச்சிவாயவே.

(11) நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன்சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.

« Older entries